கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என்று பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை கோயம்பேடில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாக் கொண்டு செய்லபடும் தனியார் நிறுவதனத்திற்கு தாரை வார்க்கப்பட இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிச்சியளிக்கிறது.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
சென்னை மாநகர் முதன்மை அடையாளமாக திகழ்ந்து வரும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்னை மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது. பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியை அவசரம், அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய தமிழக அரசு, இன்னொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கும் மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் ஆட்சி முடிவதற்கு முன்பாகவே கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவசரம்தான்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர். தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர் , கோயம்பேடு சந்தை பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும். அது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும். இந்த நிலைத்தை பூங்காவாக மாற்ற வேண்டும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவதற்கு ஏராளமான நியாயங்கள் உள்ளன. இந்தியாவில் அனைத்து பெரு நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான பூங்காக்கள் பெருமளவில் உள்ளன.
பூங்காக்கள் எனப்படுபவை அழகுக்கான இடங்கள் இல்லை. அவைதான் உடல் ஆரோக்கியத்தை காப்பாதற்கான உடல்பயிற்சி செய்யும் இடங்களாகவும், மனிதர்கள் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கும் ஆலைகளாகவும் திகழ்கின்றன. சென்னை மாநகரத்தில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகின்றனர்.
இவற்றைகட்டுபடுத்தவும், மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை. இதனால் இங்கு சென்னையின் மிகப் பெரிய பூங்காவை உருவாக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“