Koyambedu market onion rates : தாமதமாக துவங்கிய பருவமழை, அதிகமாக கொட்டித்தீர்த்த பருவமழை என இரண்டு காரணங்களால் இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. வெங்காயத்தின் விலை ரூ.200-ஐ தொட்ட போதும் அதனை வாங்க பொதுமக்கள் அலை மோதிய வண்ணம் தான் இருக்கின்றனர். இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியார் வியாபாரிகள் எகிப்தில் இருந்து சுமார் 35 டன் வெங்காயம் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இறக்குமதி செய்துள்ளனர்.
Advertisment
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழர்
தற்போது இறக்குமதியாகியிருக்கும் மதிப்பைக் கொண்டு வெங்காயத்தின் விலையை நிர்ணயிக்க இயலாது என்று வர்த்தகர்கள் அறிவிக்கின்றனர். சிலர் இந்த வாரத்திற்குள் விலை குறையும் என்று கூறுகின்றனர். சிலரோ ஜனவரி மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என்று கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் கோயம்பேடு காய்கறி சந்தையில் 80 லாரிகள் வெங்காயம் தேவைப்படுகிறது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 லாரிகள் வரை தான் வெங்காயம் வருகிறது. மேலும் தற்போது வரும் வெங்காயத்தில் தரமும் அவ்வளவு நன்றாக இல்லை. நல்ல தரமான வெங்காயம் ரூ. 180க்கு விற்பனையாகிறது.
புதிய வெங்காய வரத்தால் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூற இயலாது. புதிதாக அறுவடை செய்யப்பட்டு வெங்காயத்தின் வரத்தைப் பொறுத்து தான் வெங்காய விலை குறைவை பற்றி யோசிக்க இயலும். புதிய வெங்காயம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சந்தைக்கு வந்தால் ஜனவரி மாதத்தில் ரூ. 60 வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்றும் வர்த்தகர்கள் தங்களின் கருத்தினை பதிவு செய்கின்றனர்.