சுந்தரத்திற்கு ஹார்ட் அட்டாக்: திருநாவின் நிச்சயதார்த்தம் நடைபெறுமா?

இதய மருத்துவர் வந்து பரிசோதித்த பின்னர் தான் எதையும் கூற முடியும் எனவும் கூறுகிறார்

Azhagu Serial on Sun TV : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரேவதி. அவரின் இளைய மகன் திருநாவுக்கு கோயிலில் நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது, மணமகளின் தந்தை சுந்தரத்திற்கு நெஞ்சுவலி வரவே, அவரை சுதாவும், ரவியும் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டனர். இந்த விஷயம் ரேவதியை தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் தெரியாது.

மருத்துவமனையில் இருக்கும் சுதாவும் ரவியும், அவருக்கு ஒன்றும் இல்லையே நாங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாமா என்று கேட்கின்றனர். சுந்தரத்திற்கு இதயத்தில் தீவிர பிரச்னை இருப்பதாகவும், உடனே சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால், வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார். மறுபுறம் நிச்சயதார்த்த பந்தலில் அனைவரும் அமர்ந்திருக்க, ”நிச்சய பத்திரிக்கை படிக்கணும், பொண்ணோட அப்பாவ கூப்பிடுங்க” என்கிறார் அர்ச்சகர். அப்போது குறுக்கிடும் ரேவதி, ”திருநாவுக்கு வாங்குன கை செயின்ல எதோ டிஸைன் மாத்தணுமாம், அதனால ரவியையும், சுதாவையும் கூப்பிட்டு அவர், கடைக்கு போயிருக்காரு, இப்போ வந்துடுவாங்க” என்கிறார்.

பின்னர் போன் செய்து, ”நகை வாங்கிட்டாங்களா, அங்க எதும் பிரச்னை இல்லையே” என நாசுக்காக விசாரிக்கிறார். ”அவருக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி பேசிக்கிறாங்க. நாங்க வர நேரம் ஆகும்” என்கிறார் சுதா. பின்னர் வரும் மருத்துவர் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறுகிறார். அதனால் இதய மருத்துவர் வந்து பரிசோதித்த பின்னர் தான் எதையும் கூற முடியும் எனவும் கூறுகிறார். பெண்ணின் அப்பா இல்லாமல் நிச்சயதார்த்தம் நடைபெறுமா, நடைபெறாதா என ட்விஸ்டோடு முடிந்திருக்கிறது நேற்றைய எபிஸோட்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

Web Title:

Sun tv azhagu serial thiruna engagement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close