/tamil-ie/media/media_files/uploads/2020/04/Corona-updates-Live-Koyambedu-Market.jpg)
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
அசாத்திய திறனை வெளிபடுத்திய சிறுத்தை – வீடியோ உள்ளே
சமூக விலகல் விதி சந்தையில் மீறப்பட்டது. இந்நிலையில் திங்களன்று வர்த்தகர் சங்கங்களுடனான சந்திப்பின் போது, மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், COVID-19 தொற்றுக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஆளானால், சந்தை மூடப்பட வேண்டும் என்றார். அதோடு மொத்த விற்பனையிலும், காய்கறிகள் மற்றும் பழங்களின் சில்லறை விற்பனையிலும் ஈடுபடும் வர்த்தகர்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், சந்தையுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
வேளாண் செயலாளர் ககன்தீப் சிங், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் டி.கார்த்திகேயன் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் ஆணையர் ஜி.பிரகாஷ் ஆகியோர் சந்தையை மாதவரம் மற்றும் கேளம்பாக்கத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இருப்பினும், இது குறித்து முடிவு செய்ய வர்த்தகர்கள் நேரம் கோரியுள்ளனர். சந்தையை உடனடியாக மாற்றுவது கடினம் என்பதைக் குறிப்பிட்டு, சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமாக வருவதால், சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும் என்றனர்.
மொத்த வியாபாரிகளின் கூற்றுப்படி, சந்தைக்கு அருகிலுள்ள ஒரு சலூன் கடையின் உரிமையாளரும், மகாராஷ்டிராவிலிருந்து பழங்களை கொண்டு வந்த லாரி ஓட்டுநரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
எப்படி பிரிக்கலாம்?
மொத்த வியாபாரிகளை குழுக்களாக பிரிக்கலாம் என்று மொத்த வியாபாரி செளந்தரராஜன் கூறினார். வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை விற்கும் வணிகர்கள், சந்தையில் ஐந்து ஏக்கர் இடத்தைப் பயன்படுத்தலாம்.
கோயம்பேடு சந்தையில் இருப்பவர்களுக்கு கொரோனா சோதனை எடுக்கப்படவில்லை என்று வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். மொத்த பழ வியாபாரி எஸ். சீனிவாசன், அருகிலுள்ள சென்னை மொஃபுசில் பஸ் டெர்மினஸுக்கும், தனியார் பஸ் நிலையத்தையும் சந்தையாக மாற்றலாம் என பரிந்துரைத்தார்.
தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலத்தை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது – தமிழக அரசு
சென்னை கார்ப்பரேஷனின் அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்தையை மற்ற இடங்களுக்கு மாற்ற பொது சுகாதார நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அது ஒரு சவாலான பணியாக இருக்கிறது. "வர்த்தகர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. சந்தையை மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு எதிராக, வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் இது அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்” என்றார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது, "கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும், பொதுமக்கள் சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்படும். நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழச் சந்தை இயங்கும்” என்றார்.
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் வருவதற்கு வரத் தடை உள்ளிட்ட மேற்கண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.