Advertisment

'கல்மனம் கொண்டவர் சசிகலா.. பன்னீரின் மௌனம் அம்மாவை கொன்றது'.. கே.பி. முனுசாமி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
KP Munuswamy accused Sasikala for Jayalalithas death

அதிமுக மூத்தத் தலைவர் கே.பி. முனுசாமி

கல்மனம் கொண்டவர் சசிகலா என விமர்சித்த அதிமுக மூத்தத் தலைவர் கே.பி., முனுசாமி, பன்னீர் செல்வத்தின் மௌனமே அம்மாவை (ஜெ.ஜெயலலிதா) கொன்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிமுக மூத்தத் தலைவர் கே.பி.முனுசாமி, “ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு திடீர் திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவருக்கு மாரடைப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். ஆனால் இதெற்கெல்லாம் சசிகலா சம்மதிக்கவில்லை.

தன்னை ஜெயலலிதாவின் சகோதரி எனக் கூறிக் கொண்ட சசிகலாவும், அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வமும்தான் இதற்கு காரணம்.
சசிகலா கல்நெஞ்சம் கொண்டவர், ஜெயலலிதா வகித்த பதவியை ஓ.பன்னீர் செல்வம் வகித்துவந்தார். அதனால் அவரும் மௌனமாக இருந்துவிட்டார்.

மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனை ஆறுமுகசாமி ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.
அதிமுக மூத்தத் தலைவர் கே.பி. முனுசாமியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தற்போது தனித்தனியே பிரிந்து செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சசிகலா உள்பட சுகாதார அலுவலர்கள் மீதும் குற்றஞ்சாட்டு கூறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Aiadmk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment