scorecardresearch

தரமற்ற கட்டுமானம்..கேபி பூங்கா கட்டிட ஒப்பந்ததாரருக்கு சட்டவிரோதமாக ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

சென்னை கேபி பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சமீபத்தில் அதன் தரமற்ற கட்டுமானத்துக்காக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பந்தபட்ட கட்டிட ஒப்பந்ததாரருக்கு சட்டவிரோதமாக ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக என்ஜிஓ குற்றம் சாட்டியுள்ளது.

தரமற்ற கட்டுமானம்..கேபி பூங்கா கட்டிட ஒப்பந்ததாரருக்கு சட்டவிரோதமாக ரூ.1 கோடி ஊக்கத்தொகை!
Kp park Poor construction: The NGO alleges that the contractor was illegally received Rs 1 crore incentive

சென்னை கேபி பூங்காவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைக் கட்டிய நிறுவனம், அரசியல் சர்ச்சையையும், தரக்குறைவான கட்டுமானப் பணியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியது. தரமற்ற குடியிருப்புகளை கட்டிய இந்த நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. திங்களன்று நகரத்தை மையமாகக் கொண்ட ஊழல் எதிர்ப்பு அமைப்பு வெளியிட்ட ஆவணம் இதை வெளிப்படுத்தியது.

“கட்டுமானச் செலவில் ஒரு சதவீத போனஸ் அதாவது ரூ. 90.91 லட்சம், கேபி பூங்கா கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டியதாகக் கூறப்படும் ஒப்பந்ததாரரிடம் ஆகஸ்ட் 12, 2020 அன்று இறுதித் தீர்வுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளார்.

கட்டமைப்பை கட்டிய PST இன்ஜினியரிங் கட்டுமானத்திற்கு வெகுமதி அளிக்கும் முடிவு சந்தேகத்திற்குரியது மட்டுமல்ல, சட்டவிரோதமானது. ஏனெனில், டெண்டரில் அங்கீகரிக்கப்பட்ட தொகையை அதிகரிக்க அத்தகைய விதிமுறை இல்லை. “எனவே, ஒப்பந்தக்காரருக்கு இதுபோன்ற போனஸ் முதலில் சட்டவிரோதமானது” என்று அமைப்பு மேலும் கூறியது.

ஐஐடி-மெட்ராஸின் நகரமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (கியூப்) நிறுவியபடி, ஒப்பந்ததாரர் மிகவும் மோசமான தரம் குறைந்த வீட்டைக் கட்டியிருப்பதால் இது மிகவும் முக்கியமானது என ஜெயராம் கூறினார்.

சென்னை கேபி பூங்காவில், இடிந்து விழும் பிளாஸ்டரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கட்டுமானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்களை மாநில அரசு நியமித்தது.

ஐஐடி கியூப் அறிக்கையின் அனுமானம் என்னவென்றால், 90 சதவீதத்திற்கும் அதிகமான ப்ளாஸ்டெரிங் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்திற்குக் குறைவாக இருப்பதால், தளத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மீண்டும் பூசப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கட்டுமானம் தரமற்றது என்று குழு அறிக்கை அளித்த போதிலும், குடியிருப்புகள் கட்டுவதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நம்பகமான துறை ரீதியான எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்கவில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kp park poor construction ngo alleges that the contractor was illegally received rs 1 crore incentive