கலைஞருடன் பயணித்தவர்களுக்கு திமுக-வில் மரியாதை இல்லை: கே.பி.ராமலிங்கம்

கே.பி. ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்

கே.பி. ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KP Ramalingam dmk met cm palanisamy

KP Ramalingam dmk met cm palanisamy

சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி. ராமலிங்கம் நேரில் சந்தித்து பேசினார்.

Advertisment

திமுக-வின் கே.பி.ராமலிங்கம், கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய போது, அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை வெளியிட உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் பாஜகவில் இணைய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. பிறகு கொரோனா வைரஸ், பரவல் அதிகரிக்க, செய்திகளில் பெரிதாக அடிபடாமல் இருந்தார்.

Advertisment
Advertisements

'வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை' - அமீர் விளக்கம்

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை கே.பி.ராமலிங்கம் இன்று சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை முன்னிறுத்தி நாடக அரசியல் செய்கிறார். பொதுமக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. திமுகவில் மூத்தோருக்கு மரியாதை கிடையாது.

கருணாநிதி உடனிருந்து பயணித்தவர்களுக்கும் மரியாதை கிடையாது. கலைஞரைப் போல கட்சி நடத்த ஸ்டாலினுக்கு தெரியாது.

திமுகவிலிருந்து பலபேர் பேசி வருகிறார்கள். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் தயாரான நிலையில் உள்ளனர். அதற்கான தருணம் இது கிடையாது.

"வடிவேலுவை கடித்த நாய்கள் செத்ததை போல கொரோனாவும் ஓடும்” - செல்லூர் ராஜூ

தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறது. இதை பாராட்டவே முதல்வரை நேரில் சந்தித்து உள்ளேன். மரவள்ளி கிழங்குக்கு விரைவில் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

கே.பி. ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: