scorecardresearch

ஈரோடு கிழக்கு: இ.பி.எஸ் அணிக்கு புதிய தமிழகம், இந்து மக்கள் கட்சி ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிகவின் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவளிப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு: இ.பி.எஸ் அணிக்கு புதிய தமிழகம், இந்து மக்கள் கட்சி ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிகவின் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவளிப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது: ” கலைஞரின் நினைவை போற்றும் வகையில் மெரினாவில் வைக்கப்படும் பேனா சிலை தேவையற்றது. 1997-ம் ஆண்டு பொதுபோக்குவரத்து கழகங்களுக்கு  பெயர் மாற்றம் செய்தபோது, பல்வேறு கலவரம் வெடித்தது.  அப்போது கலைஞர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதுபோல பெயர் வைக்க கூடாது என்றும்  அதுபோல் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் திறக்ககூடாது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த 20 வருடங்களாக எந்த நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்படவில்லை. திமுக கட்சி கொடுத்த வாக்குறுதியில் இருந்து விலகுகிறது.

ரூ. 100 கோடியை கடலில் செலவு செய்வது தேவையற்றது. திருவள்ளுவர், விவேகானந்தர் சிலைகள் பாறையில்தான் இருக்கிறது. மேலும் திருவள்ளுவர் சிலை ஒட்டுமொத்த தமிழ் மக்களின்  அடையாளம். அந்த விஷயத்தையும் பேனா சின்னத்தையும் ஒன்றாக பார்க்ககூடாது. ஈரோடி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எனது ஆதரவு அதிமுகவின் எடப்பாடி அணிக்குத்தான். திமுக கட்சி கடந்த 2 வருடங்களாக அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும்.” என்று பேசியுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Krishna swamy supports admk eps side for erode election

Best of Express