Advertisment

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: 9 பேர் பலி; 7 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரியில் உணவகத்தின் சிலிண்டர் வெடித்தில் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Krishnagiri firecracker godown accident: 9 die, 7 serious injury Tamil News

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: காலை 10 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

க. சண்முகவடிவேல்

Advertisment

News about firecracker, Krishnagiri in Tamil: கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் ஒன்றில் இன்று காலை 10 மணியளவில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்த விபரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகில் ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

இதில் ராஜேஸ்வரி, பட்டாசு கடைக்காரர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருதீஷ் உள்பட 9 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். பட்டாசு கடையில் இருந்தவர்கள் உடல் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் உடல் பாகங்கள் சிதறி விழுந்து காண்போர் மனங்களை உலுக்குவதாக அமைந்தது. விபத்தின்போது ஓட்டலில் 4 பேர் இருந்ததாகத் தெரிகிறது. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தி.மு.க எம்.எல்.ஏ மதியழகன், அ.தி.மு.க எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

நிகழ்விடத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறுகையில்," உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பட்டாசு கடைக்கும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் இன்னும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா. மேலும் உயிரிழப்பு இருக்கிறதா போன்ற தகவல்கள் தெரியவரும்" என்றார்.

விபந்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த பல வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீதும் கட்டிட இடிபாடுகள் சிதறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இதனிடையே, கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதியுதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Krishnagiri Fireworks Factory
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment