Krishnagiri Election Results 2024 Live Update: கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4,42,419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 2,69,743 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.
இதற்கு அடுத்து, பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மன் 1,86,977 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா ராணி 95,239 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முன்னிலை வகிக்கிறார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1,08,795 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அ.தி.மு.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 68352 வாக்குகள் பெற்றுள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மன் 56,326 வாக்குகள் பெற்றுள்ளார்.
நா.த.க வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா ராணி 21,899 வாக்குகள் பெற்றுள்ளார்.
காலை 10.30 மணி நிலவரப்படி:
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 20,826 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அ.தி.மு.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 13,224 வாக்குகள் பெற்றுள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மன் 9,524 வாக்குகள் பெற்றுள்ளார்.
நா.த.க வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா ராணி 3,594 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில், அதில் இருந்த சில தொகுதிகளையும், வந்தவாசியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஆகும்.
கிருஷ்ணகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,09,913; ஆண் வாக்காளர்கள்: 8,07,389; பெண் வாக்காளர்கள்: 8,02,219; மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 305 ஆவர். 2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிர் மக்களவைத் தகுதியில் மொத்த வாக்குகள் - 1623179; பதிவான வாக்குகள் - 1160498; வாக்குப்பதிவு சதவீதம் - 71.50 ஆகும்.
2024 மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோபிநாத் கே கைச் சின்னத்திலும், அ.தி.மு.க சார்பில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் வி இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க சார்பில் நரசிம்மன் தாமரை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா ராணி மைக் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் வரலாறு:
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தற்போது கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி ஒசூர், தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
15வது மக்களவைத் தேர்தல் (2009)
2009-ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இ.கோ. சுகானம் 3,35,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் நஞ்சே கவுடு 2,59,379 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட அன்பரசன் 97,546 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க சார்பில் 20,484 பாலகிருட்டிணன் 20,486 வாக்குகள் பெற்றார்.
16 வது மக்களவைத் தேர்தல் (2014)
2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் 4,80, 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட, சின்னபில்லப்பா 2,73,900 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்லக்குமார் 38,885 வாக்குகள் பெற்றார்.
17-வது மக்களவைத் தேர்தல் (2019)
2019-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்லக்குமார் 6,11,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி. முனுசாமி 4,54,533 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நா.த.க சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 28,000 வாக்குகள் பெற்றார்.
18-வது மக்களவைத் தேர்தல் (2024)
இந்நிலையில், 18-வது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோபிநாத் கே போட்டியிட்டுள்ளார்.
அ.தி.மு.க சார்பில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டுள்ளார்.
பா.ஜ.க சார்பில் நரசிம்மன் போட்டியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா ராணி போட்டியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.