கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். பர்கூர் தனியார் பள்ளியில் போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த என்.சி.சி முகாமில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் 12 வயது சிறுமியை என்.சி.சி பயிற்சியாளர் என்று கூறிய சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, சிவராமன் கைதுக்கு முன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவராமனுக்கு உதவியதாக இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கமல், சுதாகர் ஆகிய இருவரை சிறப்புப் புலனாய்வுக் குழு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுதாகர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கமல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“