மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே இயங்கி வந்த தனியார் பள்ளியில் என்.சி.சி முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கெடுத்த 8ம் வகுப்பு மாணவி சிவராமன் என்பவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் இவர் 13 மாணவிகளுக்கு மேற்பட்டவரிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பள்ளி முதல்வர், தாளாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு பயந்து ஒரு நாளுக்கு முன்பாக எலி விஷம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் இவரது திடீர் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றாவாளி என்கவுண்டர் செய்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“