தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச் சாவடிகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறது. மத்திய அரசு வாகன விற்பனை மற்றும் பதிவின் போது சாலை வரி வாங்காததாலேயே, சுங்கக் கட்டணம் வசூல் செய்கிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், 339 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இதில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது. நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரையும், ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“