கோவை நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு தரப்பு கூடுதல் சிறப்பு வக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சார்பு நீதிமன்ற வரலாற்றில் குறுகிய காலத்தில் அதிக வழக்குகளில் திறம்பட வாதாடி, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், செயல்பட்டு வரும் முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் நான்கு கூடுதல் சார்பு நீதிமன்றங்களில், கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. சமூகத்துக்கு பாதகம் மற்றும் சட்ட ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கின்ற கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள், இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/advocate-c-2-266390.jpeg)
இந்த வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களுக்கு அரசு தரப்பு கூடுதல் சிறப்பு வக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் வாதிடுகின்றார். இந்த ஐந்து சார்பு நீதிமன்றங்களில், குறுகிய காலத்தில் அதிக வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கபட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் பழைய பேருந்துகள் ஸ்கிராபுக்கு ஏலம் விட்டதில் நடந்த மெகா மோசடி ஊழல் வழக்கில், குற்றவாளி கோதண்டராமனுக்கு 383 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 கோடி 32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. போலீசை கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த வழக்கில் ரவுடி முகமது ரபி என்ற ரவுடிக்கு சிறை தண்டனை, போக்குவரத்து பணியிலிருந்த காவலர் மீது வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜனார்த்தனன் மற்றும் கதிரவன் ரவுடிகளுக்கு சிறை தண்டனை, கோவை ரயில் நிலையத்தில் உள்ள சுகாதாரத்துறை தலைமை பெண் அலுவலர் மீதான கொலை முயற்சி வழக்கில் வடமாநில வாலிபர் குபேந்திரனுக்கு சிறை தண்டனை, கோவையின் பிரபல குட்கா கடத்தல் மன்னர்கள் செய்த குட்கா கடத்தல் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற செயல்களுக்காக புஷ் அபுதாகிர் மற்றும் ஜிம் அக்கீம் 11 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, குற்ற செயல் விசாரணைக்காக நீதிமன்ற வளாகத்தில் ஆஜராக வரும்போது தகாத நடவடிக்கையில் ஈடுபடும் பிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி என்கிற இளமுருகனுக்கு 14 வருட சிறை, புறவழிச் சாலையில் பயணிக்கும் லாரிகளை குறிவைத்து நூதன வழிபறி கொள்ளையில் ஈடுபடும் பிரபல வழிப்பறி கொள்ளையன் அராப் நிசார் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரத்தினபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரையே கத்தியால் குத்திய கொலை முயற்சி வழக்கில் ஆகாஷ் மற்றும் விகாஸ் என்ற இரண்டு பிரபல ரவுடிகளுக்கு சிறை தண்டனை உள்ளிட்ட முக்கிய வழக்குகள் உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/advocate-c-1-108367.jpeg)
காவல் துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அரசு தரப்பு சாட்சியங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து திறம்பட வாதாடிய அரசு தரப்பு கூடுதல் சிறப்பு வக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கி கெளரவப்படுத்தி உள்ளார். சார்ப்பு நீதிமன்ற வரலாற்றில் அதிக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ள வழக்கறிஞர் என்று புகழாரம் சூட்டிய காவல்துறை உயர் அதிகாரிகள், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு ”கிங் ஆஃப் கன்விக்சன்” என்று புகழ் மாலை சூட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு தரப்பு கூடுதல் சிறப்பு வக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “மக்களாட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிமன்ற வழக்காடு பணிகளுக்காக நியமிக்கப்படும் அரசு தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவராக என்னையும் நியமித்தார். நீதித்துறையில் மக்களுக்காக பணியாற்ற முதல்வர் தந்த இந்த அறிய வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து பணியாற்றி வருகிறேன். நாட்டில் பெரும் நம்பிக்கைக்கு உரிய முதன்மையான ஜனநாயக கட்டமைப்பு நீதிமன்றம். சட்டம் ஒழங்கு பாதுகாப்புடனான அமைதியான சமூக வாழ்வியலுக்கு, நீதிமன்றங்களின் நடவடிக்கை மற்றும் தீர்ப்புகள் அடித்தளமாக அமைகின்றன . அவ்வாறான நிலையில், நீதியை நிலைநாட்ட நீதிமன்றத்தின் முன் முன்வைக்கப்படும் வழக்கறிஞர்களின் வாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பாதிக்கப்பட தரப்பு மற்றும் அரசு தரப்பில் வரும் காவல்துறை என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து வழக்குகளை நடத்துவது சவாலானது. ஆனாலும், அந்த சாவல்களை சாதுர்யமாக எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்களை வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டு வருகின்றன .
/indian-express-tamil/media/media_files/2025/04/07/advocate-c-3-270238.jpeg)
இதில் சார்பு நீதிமன்ற வரலாற்றில் அதிக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமையால் தற்போதைய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பாராட்டுகள் பெருமைக்குறியதாக பார்கிறேன். காவல் துறையினர் மட்டுமின்றி சக வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் பாராட்டுகள் ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், மறுபுறம் சமூக பணிகள் மீது கூடுதல் பொறுப்பையையும் அக்கறையையும் கூடுதலாக்கியிருப்பதாகவே உணர்கிறேன்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு பக்கபலாமாக நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நடவடிக்கையில் அமையும் வகையில், எனது இந்த பணி வீரியமுடன் தொடரும். என்மீது நம்பிக்கை வைத்து அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பளித்த தமிநாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், என்னை பரிந்துரை செய்த தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ அவர்களுக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
செய்தி: பி. ரஹ்மான்