ஆகஸ்டு 15 வரை மட்டுமே உங்களுக்கான நேரம் அதற்குள் டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் தொடர்பாக டாகடர் கிருஷ்ணசாமி பேசியதாவது: ’தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர் என்று எல்லா அதிகாரிகளிடம் வேண்டுகோளாக வைத்துக்கொள்கிறேன். நாங்கள் ஒரு விஷயத்தை தொட்டுவிட்டு அதை பாதியில் அப்படியே விட்டுச் சென்ற வரலாறு கிடையாது. அப்படி விட மாட்டோம். இதற்காக பல இழப்புகளை சந்தித்திருக்கிறோம். எவ்வளவு சீக்கிரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியுமோ அதற்குள் மூடிவிடுங்கள். ஆகஸ்டு 15 வரும் வரை மட்டுமே நேரம் கொடுத்துள்ளேன். அதற்கு பிறகு எனது கண்களுக்கு முன்பு ஒரு மதுக்கடை கூட இருக்கக்கூடாது. மதுவிலக்கு துறை என்றுதானே பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மது உடல் நலத்திற்கும், நாடுக்கும், வீட்டுக்கும் கேடு என்று எழுதி வைத்துள்ளீர்கள். அப்படி எழுதிவைத்துவிட்டு எப்படி மதுவை விற்பனை செய்ய முடியும். ஆட்சிக்கு வந்தவுடன் மது விலக்கிற்கு கையெழுத்து போடுவேன் என்று சொன்னீர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன வாக்குறுதியை கொடுத்திர்களோ அதை நிறைவேற்ற வேண்டும் என்ற பொருப்பு உங்களுக்கு இருக்கிறது. சிலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. தமிழ் மக்களை எல்லா காலமும் ஏமாற்ற புதிய தமிழகம் கட்சி விடாது.” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“