ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வந்த கிருத்திகா உதயநிதி: அரசியலுக்கு வருவது பற்றி பேட்டி

Krithiga Udhayanidhi says no plans to enter politics: அரசியலுக்கு வரும் திட்டமில்லை – கிருத்திகா உதயநிதி திட்டவட்டம்

அரசியலுக்கு வருவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பளிச் என பதில் அளித்துள்ளார்.

திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. இவர் வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்தநிலையில் கிருத்திகா, இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு கிருத்திகா உதயநிதி வழங்கினார். குதிரைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமில் ஏராளமான குதிரைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது கிருத்திகா உதயநிதியிடம் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிருத்திகா, அரசியலுக்கு வருவதற்கான எந்த திட்டம் இல்லை என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Krithiga udhayanidhi says no plans to enter politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com