KS Alagiri said Congress’s one family one ticket decision does not applicable to Chidambaram family: காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம் ஒரு பதவி என்ற முடிவு சிதம்பரம் குடும்பத்திற்கு பொருந்துமா என்ற கேள்விக்கு, இருவரும் தனித்தனி குடும்பம் என கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.
தொடர் தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், உதய்ப்பூரில் அக்கட்சியின் சிந்தனை அமர்வான சிந்தன் ஷிவர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு குடும்பம் ஒரு பதவி என்ற நடைமுறையை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், காங்கிரஸ் சிந்தனை அமர்வில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்றால், ப.சிதம்பரத்துக்கு மீண்டும் எம்.பி பதவி கொடுக்கப்படுமா? ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யாக உள்ள நிலையில், காங்கிரஸின் முடிவு சிதம்பரத்துக்கும் பொருந்துமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஜி ஸ்கொயர் பிரச்னை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்; ஊடக துறையினர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் ஒரு குடும்பம், கார்த்தி சிதம்பரம் ஒரு குடும்பம். திருமணமாகிவிட்டால் இருவருக்கும் தனித்தனி ரேசன் கார்டு கொடுக்கப்படுகிறது தானே என கூறினார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த பதிலை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil