தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ks alagiri tests covid 19 positive, tamil nadu congress tests covid 19 positive, கேஎஸ் அழகிரிக்கு கொரோனா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, கேஎஸ் மருத்துவமனையில் அனுமதி, கோவிட் 19, கேஎஸ் அழகிரி மருத்துவமனையில் அனுமதி, ks alagiri hospitalised, congress leader ks alagiri, ks alagiri coronavirus affected, ks alagiri coronavirus positive

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்திருக்கிறது என்றாலும், கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்துவிடவில்லை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருத்துவர்கள், சுகாதரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என பலரும் ஆளாகியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பரிசோதனையில் இன்று (06.12.2020) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு திமுக, காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட சந்திப்பில் கே.எஸ்.அழகிரி அழகிரி கலந்துகொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Congress K S Alagiri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: