Advertisment

ஜாஃபர் தனது பிசினஸ் பார்ட்னர் என்பதை இயக்குனர் அமீர் மறைப்பது ஏன்? கே.எஸ் ராதாகிருஷ்ணன் கேள்வி

ஜாஃபர் தனது பிசினஸ் பார்ட்னர் என்பதை இயக்குனர் அமீர் மறைப்பது ஏன்? கே.எஸ் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர்..

author-image
WebDesk
New Update
ksr, k.s.radhakrishnan,

கே.எஸ் ராதாகிருஷ்ணன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜாஃபர் தனது பிசினஸ் பார்ட்னர் என்பதை இயக்குனர் அமீர் மறைப்பது ஏன்? கே.எஸ் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கே.எஸ். ராதாகிருஷ்ணன், “தனக்கும் போதை வழக்கில் சிக்கியிருக்கும் ஜாஃபர் சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற உறவு தான் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்த அறிக்கைய ஓன்று வெளியிட்டுள்ளீர்கள்.

Advertisment

நீங்களும் ஜாஃபர் சாதிக்கும் இனைந்து உயர்தர (4am cafe & kitchen) மற்றும் The Law Cafe உணவகத்தை திறந்திற்களே அதை ஏன் அறிக்கையில் மறைத்து உள்ளீர்கள்?
கடைத்திறப்பு விழா மேடையில் பேசும் போது "வாய்நிறைய நன்பர் ஜாஃபர்" நன்பர் ஜாஃபர் என சொன்ன நீங்கள் ஏன் திடிரென அவரை நேற்று வெளியிட்ட அறிக்கையில் "தயாரிப்பாளர் ஜாஃபர் என அழைக்கிறார்கள்?

கடைத்திறப்பு விழாவிற்கு வந்த விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் அனைவரும் கடையை நீங்களும் ஜாஃபரும் இனைந்து தான் தொடங்கியுள்ளீகள் என கூறி வாழ்த்துக்கள் சொல்கிறார்களே?
அறிக்கையின் 7ஆவது பத்தியில் சட்டவிரோத செயல்களில் ஈடுப்படும் யாராருடன் இனைந்து பனியாற்ற போவதில்லை என சொல்யுள்ளீர்களே... அதாவது நீங்கள் "இறைவன் மிக பெரியவன்" படத்திலிருந்து விலகிக் கொள்ள உள்ளீர்களா?

அப்போ உங்கள் "மாயவலை" படத்தின் தயாரிப்பாளர் "ஜாஃபர் சாதிக்" ஆச்சே அதை என்ன பன்ன போரீங்க? எனக்கும் - சாதிக்கிற்கும் தயாரிப்பாளர் இயக்குனர் உறவு மட்டுமல்ல Business Partners கூட என சொல்ல மறுப்பது Sorry மறைப்பது ஏன்?
ஏதோ வக்கீலிடம் Legal அட்வைஸ் கேட்டுளிர்கள் அவர்கள் எழுதி கொடுத்ததை அறிக்கையை வெளியிட்டு உள்ளீர்கள் அது உங்கள மேலும் சிக்கலில் சிக்கவைக்கும் என நீங்கள் யோசிக்கவில்லையா?

அனைவருக்கும் தெரிந்த உண்மையான நீங்களும் - ஜாஃபர் சாதிக்கும் Business Partners என்பதை மறப்பது ஏன்? புலனாய்வு அமைப்புகள் இவையெல்லாம் எளிதாக மோப்பம் பிடிக்கும் என்பதை கூட Legal Team தங்களுக்கு ஆலோசனை வழங்க வில்லையா?
இரும்பு வியாபாரம் யாருடன் ஜாஃபர் வியாபாரம் நடத்தினர்?
யாருக்கு எம்பி பதவி பெற என்ன திறை மறைவு பணிகள் நடந்தன? என பலர் சொல்கின்றனர்… இது உண்மையா

*புலனாய்வு அமைப்புகள் தேச நலன் - இளைஞர் நலன் கருத்தில் கொண்டு உரிய விசாரணை வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரூ.2500 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சிக்கிய நிலையில் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாஃபரை போலீசார் தேடிவருகின்றனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment