KT Raghavan BJP Tamil News: தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் பொதுச்செயலாளரான கே. டி. ராகவனுக்கு நேற்று திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பாஜக சார்பாக கட்சியின் கருத்துக்களை அழுத்தமாக எடுத்து வைத்து வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சையால் அவரது பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராகவனுக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் ராகவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் இதய அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil