/tamil-ie/media/media_files/uploads/2023/08/MK-Stalin-1-4.jpg)
முக ஸ்டாலின்
சந்திரயான்3 வெற்றிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
நிலவின் மேற்பரப்பை கைப்பற்றிய 4ஆவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை.
அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
The successful lunar landing of #Chandrayaan3 brings an immense sense of accomplishment to Tamil Nadu. The three #Chandrayaan missions have been led by exceptional minds from Tamil Nadu - Mayilsamy Annadurai, M Vanitha, and now P Veeramuthuvel. Their dedication and expertise… https://t.co/ESTsTnZij5pic.twitter.com/nUyUBoNLUv
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023
சந்திரயான்- 3 விண்கலம் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்- 3 விண்கலம் அனுப்பபட்டுள்ளது.
கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் இந்நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.