/indian-express-tamil/media/media_files/2025/11/02/kulalar-sangam-2-2025-11-02-22-45-51.jpg)
குலாலர் சங்கத்தின் 18-வது மாவட்டத் தேர்தல் கோவை பேரூரிலுள்ள குலாலர் சமூக மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மண்பாண்ட தொழிலை இடையூறுகள் இல்லாமல் செய்யச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் களிமண் சார்ந்த கைவினைப்பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு வழங்க வேண்டும் எனவும் குலாலர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், மண் பானைகள் மற்றும் அடுப்புகள் போன்ற பொருட்களை கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குலாலர் சங்கத்தினர் கோவையில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்ட குலாலர் சங்கம் கடந்த 52 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. குலால இன மக்களின் வாழ்க்கை, பொருளாதார, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்தச் சங்கம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் கிராமங்களிலும் கிளைகளை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
இச்சங்கத்தின் 18-வது மாவட்டத் தேர்தல் கோவை பேரூரிலுள்ள குலாலர் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புதிய மாவட்ட தலைவராக வழக்கறிஞர் பி.செந்தில்குமார் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட செயலாளராக ஜி.சி. பழனிசாமி, பொருளாளராக நடராஜன், இளைஞர் அணி அமைப்பாளராக பன்னீர்செல்வம், மகளிர் அணி அமைப்பாளராக பி. மல்லிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில நிர்வாகிகளாக மாநிலத் துணைத் தலைவர் எம்.ராஜகோபால், மாநில இணை செயலாளர் ஏ. சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றனர். இந்த விழாவில் பல்வேறு சமூக பிரதிநிதிகளும் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகம் சார்பில், குலாலர் இன மக்கள் மண்பாண்ட தொழிலை இடையூறுகள் இல்லாமல் செய்யச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்; களிமண் சார்ந்த கைவினைப்பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு வழங்க வேண்டும், மண் பானைகள் மற்றும் அடுப்புகள் போன்ற பொருட்களை கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கவும், புறம்போக்கு நிலங்களில் மண்பாண்ட தொழில் செய்து வரும் குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.
புதிய நிர்வாகத்தின் எதிர்காலத் திட்டங்களாக, இளைய தலைமுறையை சங்கச் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்வது, சங்கத்தின் செயல்முறைகளை கணினி மென்பொருள் முறையில் மாற்றுவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது, திருமணத் தகவல் மையத்தை இணைய வழியாகச் செயல்படுத்துவது போன்ற பல முன்னேற்றமான முயற்சிகள் அறிவிக்கப்பட்டன.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us