குலசை தசரா, திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இந்த இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தசரா மற்றும் திருப்பதி பிரம்மோற்சவம் விழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தசரா மற்றும் திருப்பதி பிரம்மோற்சவம் விழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

author-image
WebDesk
New Update
Book SETC tickets online and chance to win Rs 10000 in TN  Tamil News

Kulasekarapattinam Dasara Tirupati Brahmotsavam SETC additional buses TNSTC online booking

சென்னை: திருவிழாக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை பக்தர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தசரா மற்றும் திருப்பதி பிரம்மோற்சவம் விழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisment

தசரா சிறப்பு பேருந்துகள்: 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்.3-ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையிலிருந்து குலசேகரன்பட்டினத்துக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாகவும் அக்.1 முதல் அக்.3 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி சிறப்பு பேருந்துகள்: 

திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம்” திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக, சென்னை, திருச்சி, தஞ்சாவூா், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு கடந்த செப். 22 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப் பேருந்துகள் வருகிற அக்.6 வரை இயக்கப்படும்.

பயணிகள் இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை www.tnstc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements
Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: