பூரண மதுவிலக்கிற்காக குமரி அனந்தன் உண்ணாவிரதம் : காந்தியவாதிகள் என்றுமே போராட்டத்தைக் கூட அறநெறியில் தான் வழி நடத்துவார்கள். அகிச்மை கொண்டு எதையும் வென்றிட இயலும் என்று தீர்க்கமாக நம்பிய காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மூத்த காங்கிரஸாருமான குமரி அனந்தன் இன்று உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு தலைமை ஏற்றுள்ளார். மேலும் படிக்க டெல்லி ராஜ்கோட்டில் இருக்கும் காந்தியின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திவரும் தேசத் தலைவர்கள்
பூரண மதுவிலக்கி வலியுறுத்தி சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் குமரி அனந்தன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் இன்று உண்ணாவிரத்ததை மேற்கொண்டு வருகிறார்கள்.
போராட்டத்தில் பங்கேற்ற குமரி அனந்தன் “குடிப்பதற்காக செலவு செய்கிறேன் என்று கூறும் கருணாஸை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
உண்ணாவிரதப் பந்தலின் கீழ் பனை ஓலையால் செய்யப்பட்ட கூடைகள், நாற்காலிகள், மேசைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ட்ரூட்டி வேல்முருகன், தொழில் அதிபர் வந்தக்குமார் ஆகியோரும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kumari anandhan fasting to apply the complete ban on liquors on gandhi jayanti