நிதி நிறுவனம் பெயரில் ரூ600 கோடி மோசடி : கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது

Tamil News Update : நிதி நிறுவனம் பெயரில் பொதுமக்களிடம் ரூ600 கோடி மோசடி செய்த வழக்கில் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamilnadu News Update : நிதி நிறுவனத்தின் மூலம் பொதுமக்களிடம் ரூ600 கோடி மோசடி செய்த கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த தம்பதியர் ஃபெரோஸ் பானு மற்றும் ஜபருல்லா ஆகியோர் கடந்த ஜூலை 21-ந் தேதி ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது தஞ்சாவூர் எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவரிடம் புகார் மனுவை அளித்துள்ளது. அந்த மனுவில், ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கு  சொந்தமான நிதி நிறுவனத்தில் ரூ .15 கோடியை டெபாசிட் செய்ததாகவும், காலக்கெடு முடிந்தும்அந்த பணத்தை திருப்பி தரவில்லை என்றும்,  அதற்குரிய லாபத்தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறியிருந்தனர்.

மேலும் இந்த பணத்தை திருப்பி கேட்டபோது, ​​சகோதரர்கள் தங்களின் அரசியல் தொடர்புகளை காரணம் காட்டி மிரட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 21 அன்று, இற்த புகார் மனு தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் சிறப்பு குழுக்கள் அமைச்சப்பட்டு தலைமறைவான  சகோதரர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் மேலாளர்களாக இருந்த ஸ்ரீகாந்தன் மற்றும் வெங்கடேசன், எம்ஆர் கணேஷின் மனைவி அகிலா, கணக்காளர்கள் மீரா மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீராம் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து சகோதரர்களுக்கு சொந்தமான 12 சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்த்தை தொடர்ந்து  சகோதரர்கள் இருவர் மீதும் ஐபிசி பிரிவு 406, 420, 120 (பி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் புதுக்கோட்டையில் ஒளிந்திருப்பதாக கிடைத்த ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) புதுக்கோட்டையில் உள்ள வேந்தன்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து கணேஷ் மற்றும் சுவாமிநாதனை கைது செய்தனர். தற்போது அவர்கள் காவல்துறையின் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் இந்தியன் எக்பிரஸ் நாளிதழில் கூறுகையில்,  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதர்ர்கள் கணேஷ் மற்றும் சாமிநாதன். ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் இருவரும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கும்பகோணத்தில்ஸ்ரீ நகர் காலனியில் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து அங்கு வெளிநாட்டு இன மாடுகளுடன் பால் வியாபாரத்தை தொடங்கி நடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பல வருடங்களாக, அவர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தி, ‘விக்டரி ஃபைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தைத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ‘அர்ஜுன் ஏவியேஷன் (OPC) பிரைவேட் லிமிடெட்’ என்ற ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த கணேஷ் தஞ்சாவூர் (வடக்கு) பிஜேபி வர்த்தகர்கள் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் மீது புகார் எழுந்துள்ளதால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 12 மாதங்களில் இரட்டிப்பாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் சகோதரர்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர். தொடக்கத்தில் மக்களிடம் சரியாக பணத்தை கொடுத்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில், பணம் கேட்ட சிலரை மிரட்டியுள்ளனர்.  இதனால் கும்பகோணம் முழுவதும் 600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டி சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டிய முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kumbakonam helicopter brothersarrested for swindling rs 600 crore

Next Story
மதுசூதனன் உடல் அடக்கம்: மு.க ஸ்டாலின், சசிகலா நேரில் அஞ்சலிStalin consoles EPS OPS in Madhusudhanan Funeral Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com