குனாஃபா என்று அழைக்கப்படும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலம். இதை தவறாமக வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
சேமியா
பட்டர்
மோசில்லா சீஸ்
க்ரீம்
பால்
வெல்லம்
ரோஸ் வாட்டர்
சுகர் சிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்
வெல்லம், தண்ணீர், எலுமிச்சை ஜூஸ்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு உறுக்க வேண்டும். அதில் சேமியாவை போட்டு 5 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும். இதுபோல வேறு பாத்திரத்தில் அடுப்பை வைத்து அதில் பாலை வைத்து, க்ரீம், வெல்லம், தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இத்தோடு ரோஸ் வாட்டர். ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து மோசில்லா சீஸ் அத்தோடு கலக்க வேண்டும்.
தற்போது சுகர் சிரப் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை கொதிக்க வைத்து. சுகர் சிரப் செய்ய வேண்டும். இறுதியாக எலுமிச்சை சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து இதை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது வறுத்து வைத்த சேமியாவில் இந்த கலவையை ஊற்ற வேண்டும். தொடர்ந்து இதை 200 டிகிரி சூட்டில் வேக வைக்க வேண்டும். சிறிது ஆறிய பிறகு அதன் மீது சுகர் சிரப்பை ஊற்ற வேண்டும். மேலும் பிஸ்தாக்களை நறுக்கி போட வேண்டும்.