பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர், வசந்தம்நகர், பி.கே.ஜி நகர் உட்பட வஹாப் பெட்ரோல்பங் எதிரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இனைப்பு சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு முழுமையாக மூடாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சாலைகள் அனைத்தும் பழுதாகியுள்ளதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை வழுக்கி விழுந்து அடிபடுவதாகவும், மக்களிடம் வாக்கு பெற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என்று யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை, வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதற்கும் மாநகராட்சி ஊழியர்கள் வராததால் வீடுகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், மழைக் காலங்களில் நோய்தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
அந்தப் பகுதியில் குடிநீர் வினியோகமும் சரிவர கிடைக்கவில்லை என்றும், வரக்கூடிய குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இது குறித்து இப்பகுதியை சேர்ந்த 87 வது வார்டு திமுக கவுன்சிலர் பாபுவிடம் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த பலனும் இல்லாததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தராத கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாலக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“