பிரியாணி கடைக்காரர் மீது வந்த காதல் கண்ணை மறைக்க.. இரட்டை கொலையாளியானர் அபிராமி!

சுந்தர் மீது வைத்திருந்த காதல் என்னை கொலைசெய்ய வைத்தது

குன்றத்தூரில் கள்ளக்காதல் காரணமாக பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற கொடூர தாய் அபிராமி குறித்த பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 நாட்களாக சென்னையை உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம், குன்றத்தூரில் கள்ளக்காதல் காரணமாக பெற்ற குழந்தைகளை பாலில் விஷம் கலந்துக் கொன்ற கொடூர தாய் அபிராமி.

வங்கியில் பணிப்புரியும் விஜய்யின் மனைவி அபிராமி, அதே பகுதியில் கடை வைத்து இருக்கும் சுந்தரம் உடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார். அபிராமி-சுந்தரத்தின் கள்ளக்காதல் அப்பகுதி முழுவதுமே பரவத் தொடங்கியது. இந்தநிலையில் அபிராமியின் மனதில் விபரீத எண்ணம் தோன்றியது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தனது குழந்தைகளை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார்.

இதன் விளைவாக நேற்று முன்தினம் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் 2 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தார். எதுவும் அறியாத அப்பாவி குழந்தைகளும் தாய் கொடுத்த பாலை வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளி குழந்தைகள் அஜய், கார்னிகா இருவரும் துடிதுடித்து பலியானார்கள்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்த விஜய், குழந்தைகள் இறந்து கிடைப்பதை பார்த்து கதறி அழுதார். காணாமல் போன அபிராமியை பற்றியும் போலீசில் தகவல் கொடுத்தார். அந்த பகுதி முழுவதும் இக்கொலை சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கொலை நடந்த வீட்டு முன்பு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையே அபிராமியின் கள்ளக்காதலனான சுந்தரம் போலீசில் சிக்கினார். அவனை வைத்து அபிராமியை பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி சுந்தரத்தை உடன் வைத்துக் கொண்டே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

சுந்தரத்தை, அபிராமியுடன் போனில் பேச வைத்து,அவரை மடக்கி பிடித்த போலீஸ் திட்டம் தீட்டினர். அதன் படி சுந்தரத்தின் பேச்சை கேட்டு, அபிராமி நாகர்கோவில் வந்தடைந்தார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நேற்று இரவு போலீசில் சிக்கிய அபிராமி, இன்று காலை 10 மணி அளவில் சுந்தரத்துடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவர்கள் இருவரிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை அபிராமி கூறியதாவது, “எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்று வருவேன் அப்போது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதன் பின்னர் எனக்கும், கணவர் விஜய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.அப்போது சுந்தரம், கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு நானும் ஒத்துக் கொண்டேன்.

எனவே திட்டமிட்டு 30 ஆம் தேதி இரவு பாலில் விஷம் கலந்து, விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கொடுக்க திட்டம் இட்டேன். ஆனால் விஜய் இரவு வீடுக்கு வராததால் கலக்கிய வைத்திருந்த பாலை குழந்தைகள் மட்டுமே குடித்தன.

அவர்கள் இறந்த பின்பு, வீட்டை விட்டு வெளியேறினேன். சுந்தர் மீது வைத்திருந்த காதல் என்னை கொலைசெய்ய வைத்தது” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close