கன்னியாகுமரி; அரசு பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் குடும்பம் – அதிகாரிகள் விசாரணை

Kuravar family stepped down by conductor from bus in kanniyakumari: கன்னியாகுமரியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் குடும்பம்

நாகர்கோவில் அருகே அரசு பேருந்திலிருந்து குறவர் குடும்பம் இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்தில் பயணித்த குறவர் குடும்பத்தினரை பேருந்திலிருந்து நடத்துநர் கிழே இறக்கி விட்டு, அவர்களது உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் கன்னியாகுமரி பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக கூறி மீன் விற்கும் மூதாட்டி ஒருவரை அரசு பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் நேரக்காப்பாளர் ஆகியோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நிகழந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kuravar family stepped down by conductor from bus in kanniyakumari

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com