தனக்கு ஏற்பட்ட எலும்பு முறிவால் தன்னால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு நடிகை குஷ்பூ கடிதம் எழுதி உள்ளார். இதை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனது முதுகு நுனி எலும்பில் ஏற்பட்ட முறிவால், தன்னால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடியவில்லை என்று குஷ்பூ பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்காக கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தில் “ சில நேரங்களில், ஒருவரின் ஆரோக்கியம் தொடர்பாக நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டும். நான் அந்த நிலையில்தான் தற்போது இருக்கிறேன். நான் என்னை பா.ஜ.க கட்சிக்கு அர்ப்பணித்துள்ளேன். பாரத பிரதமர் மோடியின் பாதையில் சென்று, தேர்தல் பரப்புரையில் முழு கவனம் செலுத்தினேன். ஆனால் எனது முதுகு எலும்பின் நுனியில் ஏற்பட்ட முறிவு காரணமாக, என்னால் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட முடியாது. அதற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும், என்பதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் முழுவதுமாக குணமாகி, மீண்டும் செயல்பட உங்கள் முழு ஆதரவு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“