காங்கிரஸ் உடன் இருக்கும் உறவை முதல்வர் ஸ்டாலின் முறித்துகொள்வாரா? என்று நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் இன பெருமையை காப்பாற்ற முதல்வர் விட்ட சவாலை காப்பாற்ற, காங்கிரஸ் உடன் இருக்கும் உறவை முதல்வர் ஸ்டாலின் முறித்துகொள்வாரா? என்றும் பிரதமர் விட்ட சவாலை முதல்வர் ஏற்பாரா என்று நடிகை குஷ்பூ பேட்டியளித்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூ பேசியதாவது :
“ பிரதமர் ஒரு சவால் விட்டு இருக்கிறார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுக்க தைரியம் இருக்கிறதா? அதே மாதிரி காங்கிரஸ் தி.மு.க-வை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக நிற்க முடியுமா? அதற்கு தைரியம் இருக்கிறதா? ஏன் தமிழத்தில் ராகுல் காந்தியால் போட்டியிட முடியவில்லை. ஏன் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. ” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.