தி.மு.க.,வினர் சேரி மொழி பேசுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பூவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பில் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, நெட்டிசன்களில் சிலர், மணிப்பூரில், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கருத்து தெரிவிக்காமல், மன்சூர் அலிகான் விவகாரத்திற்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா என கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தநிலையில், தி.மு.க ஆதரவு நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக செய்த ட்வீட்டை மேற்கோள் காட்டி தி.மு.க.,வினர் சேரி மொழி பேசுவதாக குஷ்பூ கூறியுள்ளார்.
‘இதுதொடர்பாக குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில், இதைத்தான் தி.மு.க குண்டர்கள் செய்கிறார்கள். கேவலமான வார்த்தைகளில் பேசுகிறார்கள். ஆனால் இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அதாவது ஒரு பெண்ணை அவமதிக்க கற்பிக்கப்படுகிறது. மன்னிக்கவும், உங்கள் சேரி மொழியை என்னால் பேச முடியாது, தயதுசெய்து விழித்தெழுந்து என்ன பேசினார், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். மேலும் தி.மு.க உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு அவமானம். மு.க.ஸ்டாலின், உங்களை அழிக்க உங்களைச் சுற்றி முட்டாள்கள் கூட்டம் இருக்கிறது, ஜாக்கிரதை,” என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பூ சேரி மொழி என்று குறிப்பிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சேரி மொழி என்றால் என்ன என குஷ்பூ விளக்க வேண்டும் என்றும், இது சாதிப்பாகுபாடு என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
'சேரி மொழி' பேசுவதாக தி.மு.க-வினர் மீது பாய்ந்த குஷ்பூ: நெட்டிசன்கள் கடும் கண்டனம்
தி.மு.க.,வினர் பேசும் சேரி மொழியை என்னால் பேச முடியாது; குஷ்பூ கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்
Follow Us
தி.மு.க.,வினர் சேரி மொழி பேசுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பூவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பில் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, நெட்டிசன்களில் சிலர், மணிப்பூரில், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கருத்து தெரிவிக்காமல், மன்சூர் அலிகான் விவகாரத்திற்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா என கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தநிலையில், தி.மு.க ஆதரவு நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக செய்த ட்வீட்டை மேற்கோள் காட்டி தி.மு.க.,வினர் சேரி மொழி பேசுவதாக குஷ்பூ கூறியுள்ளார்.
‘இதுதொடர்பாக குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில், இதைத்தான் தி.மு.க குண்டர்கள் செய்கிறார்கள். கேவலமான வார்த்தைகளில் பேசுகிறார்கள். ஆனால் இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அதாவது ஒரு பெண்ணை அவமதிக்க கற்பிக்கப்படுகிறது. மன்னிக்கவும், உங்கள் சேரி மொழியை என்னால் பேச முடியாது, தயதுசெய்து விழித்தெழுந்து என்ன பேசினார், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். மேலும் தி.மு.க உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு அவமானம். மு.க.ஸ்டாலின், உங்களை அழிக்க உங்களைச் சுற்றி முட்டாள்கள் கூட்டம் இருக்கிறது, ஜாக்கிரதை,” என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பூ சேரி மொழி என்று குறிப்பிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சேரி மொழி என்றால் என்ன என குஷ்பூ விளக்க வேண்டும் என்றும், இது சாதிப்பாகுபாடு என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.