நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவிக்கையில் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குஷ்பு வீட்டின் அருகில் உள்ள மற்றொரு தெருவில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, தாம் தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. மன்னிப்பும் கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “1986ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் வசித்துவருகிறேன். நான் மானமுள்ள வீரமுள்ள தமிழச்சியாக வாழ்ந்துவருகிறேன்.
முதலில் சேரி என்பதற்கு என்ன அர்த்தம் எனக் கூறுங்கள். காங்கிரஸார் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால் இரண்டு நாள்கள் விளம்பரம் கிடைக்கும் என நினைத்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை அனைத்து மக்களும் எனக்கு ஒன்றுதான். நான் எல்லோரிடமும் சரிக்கு சமமாக பழகுவேன். எல்லோரிடமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு.
தலித்துக்களுக்கு ஆதரவான போராட்டம் என்கிறார்கள். கோவையில் இரும்பு கம்பியால் தலித் தாக்கப்பட்டுள்ளார். அவர்கள் வீட்டு வாசலில் சென்று ஏன் போராடவில்லை? விளம்பரம் கிடைக்காது என்ற தயக்கமா?
நான் தவறு செய்தால் குழந்தையிடம் கூட மன்னிப்பு கோருவேன். தவறு செய்யாவிட்டால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மன்னிப்பு கோர மாட்டேன். அதை எதிர்பார்க்காதீர்கள், ஏமாந்து போவீர்கள்” என்றார்.
தொடர்ந்து, “திமுகவினர் என்னை பொதுமேடையில் கூட அநாகரீகமாக அவமானப்படுத்தினார்கள். அப்போது இவர்கள் யாரும் பொங்கவில்லையை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“