புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு – குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கே.எஸ்.அழகிரி காட்டம்

கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை

நான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் நபராக இருக்கிறேன். கருத்து வேறுபாடு இருப்பது நல்லது

34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை செய்து மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கை திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அன்புமணி எம்.பி. உள்ளிட்டோர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

குஷ்பூ டீவீட்

பாஜக-வின் புதிய கல்விக் கொள்கைக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பூ ஆதரவு தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தில் குஷ்புவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர் ‘திமுகவிலிருந்து காங்கிரஸ் அங்கிருந்து பாஜகவா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதற்கு, பதிலளித்துள்ள குஷ்பு, ‘உங்களுக்கு எப்படி இவ்வளவு சின்ன புத்தியாக இருக்கிறது. கல்வி உங்களுக்கு ஏதாவது நல்லது செய்வதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஐயோ !! அது இது இல்லை’ எனக் கூறியுள்ளார்.


மற்றொருவர், ‘இருக்குற கட்சிக்கு உண்மையா இருப்பது இல்லை..இதனால் தான் கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருப்பது’ என ட்வீட் செய்திருந்தார். மேலும், அவர் கருணாநிதியின் படத்தை முகப்பு பக்கமாக வைத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, ‘ஒரு சிறந்த மனிதரின் புகைப்படத்தை வைத்து அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

குஷ்பூ விளக்கம்

இதையடுத்து, மீண்டும் ட்வீட் வாயிலாகவே தன்னிலை விளக்கம் அளித்த குஷ்பூ, “கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது கருத்து மாறுபடுகிறது. ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும்.

நான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் நபராக இருக்கிறேன். கருத்து வேறுபாடு இருப்பது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி ட்வீட்

இந்தச் சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது என குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.


இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது டுவிட்டரில், “கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர்.

காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு; கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை.

ஒழுக்கமின்மை விரக்தியிலிருந்து வருகிறது. குணப்படுத்த யோகா சிறந்த மருந்து” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தரப்பில், குஷ்புவை தொடர்பு கொண்ட போது, அவர் நேர்காணல் வேண்டாம் என்று கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kushboo supports nep congress ks azhagiri reply

Next Story
கொரோனா ஊரடங்கு… திறக்கப்படாத பள்ளிகள்… மகள்களுடன் விவசாயத்தில் இறங்கிய தந்தை!Coimbatore man teaches farming to his two daughters amid covid19 lockdown
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com