மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார் - பாஜக குஷ்பு சவால்

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kushbu, kshboo, kushbu sundar, kushbu ready to contest against mk stalin, குஷ்பு, தமிழ்நாடு, ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார், குஷ்பு ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார், பாஜக, திமுக, முக ஸ்டாலின், tamil nadu assembly elections 2021, bjp kushbu, actress kushbu, dmk, mk stalin

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisment

பாஜக சார்பில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று தெரியாது. எங்கே போட்டியிடப் போகிறேன் என்பது தெரியாது. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக மாநில தலைவரும் டெல்லியில் இருக்கக் கூடிய தேசிய தலைவரும் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால், நீங்கள் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடத் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டால், எதிர்க் கட்சி தலைவராக இருந்தாலும், திமுக தலைவராக இருந்தாலும் யார் நின்றாலும் என்னை போட்டியிட சொன்னால் நான் போட்டியிடத் தயார்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவின் வேல் யாத்திரை, பொங்கல் விழா ஆகியவற்றில் கலந்துகொண்டு வருகிறார்.

Advertisment
Advertisements

அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவருக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடத் தயார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Bjp Mk Stalin Dmk Kushboo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: