/tamil-ie/media/media_files/uploads/2021/08/bharathi-baskar-kushboo.jpg)
பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தீடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிற நிலையில், அவருடைய உடல்நிலை குறித்த தகவலை நடிகை குஷ்பூ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பட்டிமன்றத்தில் இனிமையான தமிழ் பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் பேச்சாளர் பாரதி பாஸ்கர். இவர் பட்டிமன்றப் பேச்சாளராக மட்டுமல்லாமல் உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்ற நடுவராக உள்ள பட்டிமன்றங்களில் முக்கிய பேச்சாளராக இருந்து வந்தார் பாரதி பாஸ்கர். பட்டிமன்றங்களில் பாரதி பாஸ்கரும் பேச்சாளர் ராஜாவும் கொடுக்கும் நகைச்சுவை கவுண்ட்டர்களுக்கு உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
பாரதி பாஸ்கர், 2 நாட்களுக்கு முன்பு திடீரென தாங்க முடியாத தலைவலியால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தங்கள் அபிமான பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தீடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து பிரபலங்கள், தமிழ் உணர்வாளர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆச்சு என்று கேட்டு அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்தனர். அப்போது நடிகையும் குஷ்பூ பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
Spoke to #BharatiBhaskar ji's daughter. Her surgery was successful. She has been shifted to #ICU ward na disease on the road to recovery. Continue praying for her speedy recovery. 🙏
— KhushbuSundar (@khushsundar) August 9, 2021
இந்த நிலையில், நடிகை குஷ்பூ, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கரின் சமீபத்திய உடல்நிலை குறித்த தகவலை தெரிவித்துள்ளார். குஷ்பூ தனது ட்விட்டர் பகக்த்தில் குறிப்பிடுகையில், “பாரதி பாஸ்கரின் மகளிடம் பேசினேன். பாரதி பாஸ்கருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். ஐசியூ வார்டுக்கு நோய்க்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.