சென்னையை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவருகிறது. இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.
இந்தப் பேருந்து நிலையம் 336 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது. மேலும் இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறுகையில், “குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இந்தாண்டு மத்தியில் பேருந்து நிலைய பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் தற்போது பணிகளில் முடியாத காரணத்தால் திறப்பு தள்ளிபோய் உள்ளது” என்றார். கிருஷ்ண கிரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் இந்தப் பேருந்து நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 1600 இரு சக்கர வாகனங்கள், 200 நான்கு சக்கர வாகனங்கள், தானியங்கி படிகட்டுகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. பேருந்து நிலையும் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“