Advertisment

குவைத் தீ விபத்து: தமிழர்கள் சிக்கியுள்ளனரா?; அரசு உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை சார்பில் குவைத் தீ விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவ அரசு உதவி எண்கள் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin announcement on increasing Dearness Allowance DA for govt employees pensioners 4 percentage Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள 6 மாடி குடியிருப்பில் நேற்று (ஜுன் 13) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த குடியிருப்பில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குவைத் நாட்டிற்கு வேலை தேடி சென்ற கேரளத்தவர்கள், தமிழர்கள் மற்றும் வட இந்தியர்கள் வசிக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், தீ விபத்தில் சிக்கியவர்கள் பற்றி முழு விவரம் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து தீ விபத்தில் தமிழர்கள் யாரேனும்  சிக்கியுள்ளார்களா? இது தொடர்பான விவரங்களுக்கும் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அயலகத் தமிழர் நலத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்," குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று (12.06.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.   தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உதவி எண்கள்

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனரா என்ற தகவலை சேகரிக்க அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    CMStalin Kuwait Building Fire
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment