/indian-express-tamil/media/media_files/4B6gog90XGQAicitDpQW.jpg)
"ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
KPK Jeyakumar Dhanasingh | KV Thangkabalu | Thirunelveli | Congress: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் தனசிங். தொழிலதிபரான இவரை நேற்று முன்தினம் புதன்கிழமை (02.05.2024) முதல் காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தனது தந்தை கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும், காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் உவரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக காணவில்லை தேடப்பட்டுவந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் ஏரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கபாலு விளக்கம்
இந்த நிலையில், கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு முன்பு எழுதிய கடிதத்தில், தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தங்கபாலு பேசுகையில், "கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்., எம்.எல்.ஏ. ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பல லட்சங்களை செலவு செய்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெயக்குமார். வெளியாகி இருக்கும் கடிதம் ஜெயக்குமார் எழுதியது தானா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் தனது மரணத்திற்கு முன்பு எழுதிய கடிதத்தில், "கே.வி தங்கபாலு என்பவர் தேர்தல் வேலைக்கு என்னிடம் பணம் பெற்றார். செலவு செய்ய வைத்தார். சுமார் 11 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் வாங்கிக் கொள் என்று சொல்லி முடித்து விட்டார். ஆனால், எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். கமலா போன்ற பெண் மூலம் அவரது செய்தி வெளியிடுகிறார். கமலா ஏற்கனவே கணவனை கொன்றவர் என்பது அனைவருக்கும் அறிந்த உண்மை." என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.