திருப்பரங்குன்றம் மலை முருக பெருமானுக்கு சொந்தமானது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எல். முருகன், முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோரும் அவருடன் இருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/17/MmF8nhekPTWBP5aHp81D.jpg)
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, "திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்குச் சொந்தமானது. 1983-ல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் தவறாக 'சிக்கந்தர் மலை' என பதிவு செய்யப்பட்டது. இது திருத்தப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று கடந்த 1994-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை மதித்து இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பகுதியில் சிலர் விரும்பத்தகாத சம்பவங்களை செய்து வருகின்றனர். அதற்கு, தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும். சர்வதேச அளவில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் தேசியக் கல்விக் கொள்கை" எனத் தெரிவித்தார்.