முதலமைச்சர் செயல்படாததால்தான் லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. காவல் நிலையங்களுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். லாக்கப் மரணம் குறித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டு அமைதியாக உள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடுமையாகச் சாடினார்.
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. சி.டி.ஏ.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற ஓய்வு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று மாலைக்குள் 6 ஆயிரம் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கும் தீர்க்கப்படும். இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது. ஒரு காரிடார் உத்தரபிரதேசத்திலும் 2-வது தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது.
ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
நம்முடைய நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனாலேயே அங்கு சென்று பார்த்தேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. முதலமைச்சர் செயல்படாததாலையே லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. காவல் நிலையங்களுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். லாக்கப் மரணம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டு அமைதியாக உள்ளனர்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா இல்லையா என்பது குறித்து அமித்ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியும் பேசி முடிவெடுப்பார்கள். தேசிய ஜனநாய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தானா என்கிற கேள்விக்கு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். முதல்வர் வேட்பாளர் குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என மழுப்பலாக பதில் அளித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்