தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்“ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார்.
இந்த நடைபயணம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவை மக்களையும் சந்தித்து வருகிறார். இந்த நடைபயணம் இன்று (பிப்.11,2024) சென்னையில் நடந்தது.
இந்தப் நடைபயணத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலையின் நடை பயணத்தால் ஊழல்வாதிகள் நடுங்கிப் போய் உள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய எல். முருகன், “என் மண், என் மக்கள் பாத யாத்திரையை தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்தப் பாத யாத்திரை திமுகவுக்கு, மு.க. ஸ்டாலினுக்கு, ஊழல்வாதிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவராக இருந்து வருகிறார்” என்ற எல்.முருகன், “எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் முறையாக ஆட்சி அமைக்கும்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் இருந்தும் மக்களவைக்கு பாஜக உறுப்பினர்களை அனுப்பி வைப்போம்” என்றார். அயோத்தி ராமர் கோவில் குறித்து பேசிய எல். முருகன், “பாஜக இதனை செய்துக் காட்டியது. ஜெய் ஸ்ரீ ராம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“