/indian-express-tamil/media/media_files/9P7GXb2XNchtGkYHg8YE.jpg)
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 72 அமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தமிழக பாஜக தலைவரான எல்.முருகனும் ஒருவர் ஆவர். எல்.முருகன் மத்திய இணையமைச்சராக மீண்டும் பதவியேற்றார். தமிழ்நாட்டில் இருந்து அமைச்சரவையில் இடம்பெறும் ஒரே பாஜக தலைவர் இவர் ஆவர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தோல்வியுற்ற நிலையிலும் எல்.முருகன் இணையமைச்சராக பதவியேற்றார். இவர் சிறந்த அமைப்பாளர் ஆவர். எல்.முருகன் மாணவர் செயல்பாட்டாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
பா.ஜ.கவில் சேர்வதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் பணியாற்றியுள்ளார். 47 வயதான எல்.முருகன் வழக்கறிஞர் ஆவார், இவர் தமிழகத்தின் மேற்கு மாவட்டமான நாமக்கல்லைச் சேர்ந்தவர்
கடந்த முறை இவர் ன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி வகித்தார். இந்த முறை அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.