/indian-express-tamil/media/media_files/2025/08/15/la-ganesan-death-live-updates-nagaland-governor-rss-veteran-bjp-leader-tamil-nadu-tamil-news-2025-08-15-19-51-53.jpg)
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- Aug 16, 2025 00:45 IST
தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு: எச்.ராஜா
தமிழகத்தை சேர்ந்த தீவிர தேசியவாதியும், தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகரும், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக நீண்ட காலம் தேசத்திற்காக பணியாற்றியவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலந்து மாநில ஆளுநருமான மேதகு திரு.இல.கணேசன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது என எச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த தீவிர தேசியவாதியும், தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகரும், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக நீண்ட காலம் தேசத்திற்காக பணியாற்றியவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலந்து மாநில ஆளுநருமான மேதகு திரு.இல.கணேசன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும்… pic.twitter.com/LSQXzXD8Ff
— H Raja (@HRajaBJP) August 15, 2025 - Aug 15, 2025 22:01 IST
இல.கணேசன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- Aug 15, 2025 20:15 IST
ஒ.பி.எஸ் இரங்கல்
அன்புச் சகோதரர் திரு. கணேசன் அவர்கள் தான் கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர். அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர். மிகச் சிறந்த பண்பாளர். இவருடைய இழப்பு தமிழ் இலக்கியவாதிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் பேரிழப்பு. நாடு ஒரு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 15, 2025
அன்புச் சகோதரர் திரு. கணேசன் அவர்கள் தான் கொண்ட… - Aug 15, 2025 19:58 IST
அண்ணாமலை இரங்கல்
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.
ஐயா திரு. இல. கணேசன் அவர்கள் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
— K.Annamalai (@annamalai_k) August 15, 2025
தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும்… pic.twitter.com/vXNanLofp2 - Aug 15, 2025 19:55 IST
வைரமுத்து இரங்கல்
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்களின் மறைவு துயரம் தருகிறது. யாரையும் புண்படுத்தாத பண்பட்ட அரசியல் தலைவர். பாரதிய ஜனதா கட்சியில் ஓர் இலக்கியவாதி. ஆன்மிக இலக்கியம் வளர்ப்பதற்காகவே பொற்றாமரை என்ற களம் கண்டவர்; என்னையும் அழைத்துப் பேசவைத்தவர்.
நாகாலாந்து வாருங்கள் காணாத இயற்கை கண்டு கவிதை எழுதலாம் என்று ஆசையோடு அழைத்தவர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது உரையின் திறம்பற்றிச் சொல்லிக் கரம்பற்றிப் பாராட்டினேன். மறைவு எதிர்பாராதது. போய் வாருங்கள் நல்லவரே. தாமரை மட்டுமல்ல சூரியனும் துக்கம் கேட்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து ஆளுநர்
— வைரமுத்து (@Vairamuthu) August 15, 2025
இல.கணேசன்
அவர்களின் மறைவு
துயரம் தருகிறது
யாரையும் புண்படுத்தாத
பண்பட்ட அரசியல் தலைவர்
பாரதிய ஜனதா கட்சியில்
ஓர் இலக்கியவாதி
ஆன்மிக இலக்கியம்
வளர்ப்பதற்காகவே
பொற்றாமரை என்ற
களம் கண்டவர்;
என்னையும் அழைத்துப்
பேசவைத்தவர்
நாகாலாந்து வாருங்கள்
காணாத இயற்கை கண்டு… pic.twitter.com/rrdSckUfie - Aug 15, 2025 19:28 IST
இல. கணேசன் அரசியல் பின்னணி என்ன?
தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் தலைவரும், பா.ஜ.க-வின் தமிழக முன்னாள் தலைவருமானவர் இல. கணேசன். 1990களின் முற்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து பா.ஜ.க-வுக்கு மாறினார். அப்போது அவர் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்ற அனுப்பப்பட்டார். 2003 வரை அந்தப் பதவியை வகித்தார்.
தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளைப் பேசும் பன்மொழிப் புலமை பெற்ற கணேசன், கட்சியை அதன் கடினமான காலங்களில் வெற்றி பெறச் செய்தார். அவரது பதவி காலத்தில், பா.ஜ.க ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது, ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது. அந்த அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
பின்னர், சோ ராமசாமியுடன் சேர்ந்து, கணேசனும் தி.மு.க-வை பா.ஜ.க பக்கம் இழுத்த பெருமையைப் பெற்றார். இலங்கை, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பா.ஜ.க தொடர்புகளை வளர்க்க அவர் உதவியதாகவும் நம்பப்படுகிறது.
இப்போதுள்ள மாநில பா.ஜ.க தலைவர்களைப் போலல்லாமல், கணேசன், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் நல்லுறவை பேணி வந்தார். தமிழ்நாட்டில், அரசியலில் சாதி ஒரு பங்கை வகிக்கிறது, தஞ்சாவூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த கணேசன், தனது சாதியை வெளிப்படுத்தாதற்கு பாராட்டப்பட்டார். சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்ததற்காகவும், சிறிய பையுடன் நகரும் தலைவராக இருப்பதன் நீடித்த பிம்பமாகவும் அவர் பாராட்டப்பட்டார்.
அவர் கட்சிக்காக பாடல்கள் உட்பட விரிவாக எழுதியுள்ளார், தமிழ்நாடு பா.ஜ.க-வின் “ஒரே நாடு (ஒரு தேசம்)” பத்திரிகையைத் திருத்தியுள்ளார். மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் தமிழ் அறிஞர்களின் குழுவான “பொற்றாமரை (தங்கத் தாமரை)” ஐத் தொடங்கினார்.
- Aug 15, 2025 19:19 IST
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மரணம்
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- Aug 15, 2025 19:19 IST
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு நேரலைக்கு அன்புடன் வரவேற்கிறோம்!
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தப் பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.