/indian-express-tamil/media/media_files/z92DWEDCg0SnoIG0tMGf.jpg)
தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் மரியதாஸ், தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருக்கு சென்றடையும் வகையிலான மனுவினை கொடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லோகநாதன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சார்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கவுன்சில் ஒரு சட்டம் மூலம் அமைக்கவும், நிவாரணம் கோரியும் எங்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் தமிழ்நாடு சார்பு மற்றும் "சுகாதார தொழில் சார்ந்த விதிகள் 2023 'ஏற்கனவே உருவாக்கப்பட்டு 15. 12. 2023 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். அவ்வாறு கிடைத்த தகவல்களால் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியை பெற்றோம். அதற்காக மனப்பூர்வமாக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தீர்ப்பின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து தொடர்புடைய ஒவ்வொரு சங்கங்களிலிருந்தும் மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த, சமூக அக்கறை கொண்ட உறுப்பினர்களை தமிழ்நாடு லேப் டெக்னீசியன் கவுன்சிலில் நியமிக்க வேண்டும் . மாநிலங்களவையில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்க 2023 விதிகளின்படி எங்கள் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு தேவையான தகுதிகள் உள்ளது என்பதையும் அமைச்சர் கே.என்.நேரு விடம் தெரிவித்துக் கொண்டோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்த அமைச்சர் சுகாதாரத்துறை செயலரிடம் பார்வேர்ட் செய்கிறேன், விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.