/indian-express-tamil/media/media_files/2024/11/04/NleZNvZtRGYjuPpzrYUR.jpg)
மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பெண் காவலர்கள் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், கூடல்புதுரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர், சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அதே காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம், கொசுவம்பட்டியைச் சேர்ந்த நித்தியா என்பவரும் காவலராக பணியாற்றினார். விடுப்பில் இருந்த இவர்கள் இருவரும், ஒரே இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார், இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில், காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பலத்த காயங்களுடன் இருந்த நித்தியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நித்தியாவும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இருவரது சடலங்களும் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மதன்குமார் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.