Lalitha Jewellery robbery, Police planned to inquiry at Murugan: லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளையில் இன்னும் 3 கிலோ நகை மட்டுமே மீட்கப்பட வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற நகை கொள்ளை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரதான குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட முருகன் உள்ளிட்ட சிலரை போலீஸார் துரிதமாக கைது செய்தனர்.
லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை தொடர்பாக இன்று திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘இந்த 28 கிலோ நகைகள் திருட்டு சம்பவத்தில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
முருகனை விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகைக்கடை கொள்ளையில் நேரடியாக 3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு காவல்துறையினரும் இந்த வழக்கில் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்தனர். முருகனை விசாரித்த பிறகே நகைகள் முழுவதும் மீட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கிய போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.