மணப்பாறை சிப்காட் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு: 20-ம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்குகளைத் தீர்க்க, செப்.20 அன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்குகளைத் தீர்க்க, செப்.20 அன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Manapparai SIPCOT

மணப்பாறை சிப்காட் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு: 20-ம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, வரும் 20-ம் தேதி அன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. நிலம் வழங்கியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisment

மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டைக்காக 2013ஆம் ஆண்டு கே. பெரியப்பட்டி (வடக்கு), கண்ணுடையான்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்குகள் திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில், பலருக்கு சரியான முகவரி இல்லாததாலும், சிலர் முகவரியில் இல்லாததாலும் நீதிமன்ற அறிவிப்புகளை அனுப்ப முடியவில்லை. இதன் காரணமாக, வழக்குகளை தொடர்ந்து நடத்த முடியாமல், இழப்பீட்டுத் தொகைகள் நீதிமன்ற வைப்பீட்டில் உள்ளன.

இந்த நிலையைத் தீர்க்கும் வகையில், நிலம் வழங்கியவர்கள் நேரில் ஆஜராகி தங்களின் வழக்கு நிலவரங்களைத் தெரிந்துகொள்ளவும், சட்ட உதவி பெற்று வழக்குகளை சமரசமாகத் தீர்த்துக்கொள்ளவும், ஒரு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றம் வரும் 20.09.2025 அன்று மதியம் 12 மணிக்கு, மணப்பாறை சிப்காட் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும். நில உரிமையாளர்கள் இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்கறிஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: