வீடுகட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டி வாடகை வசூலித்தவர்களை நில அபகரிப்பாளர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரியில் அன்னை இந்திரா காந்தி குடியிருப்போர் நலச் சங்கம் செயல்பட்டுவருகிறது. இதில் 98 பேர் உறுப்பனர்களாக உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதால் அந்த நிலத்தை அவர்களுக்கு பட்டா செய்து வழங்க கடந்த 1992 ஆம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதன் பிறகு பறக்கும் ரயில் திட்டத்திற்கு அந்த நிலம் தேவைப்பட்டதால் பட்டா தொடர்பான அரசாணையை ரத்து செய்து கடந்த 2003 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அந்த சங்கத்தின் தலைவர் தனஞ்செயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பறக்கும் ரயில் திட்டத்திற்கு ஒன்றரை ஏக்கர் மட்டுமே தேவைப்படுவதால், மற்ற மூன்றரை ஏக்கரில் வசிப்பவர்களை காலி செய்ய விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிலங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வேளச்சேரி தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அந்த நிலத்தில் ஒதுக்கீடு பெற்ற பலர் வணிக வளாகங்கள் கட்டி வாடகைகக்கு விடப்படிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் அந்த நிலத்தை சொந்தம் கொண்டா உரிமை இல்லை என்று தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த நிலத்தில் உண்மையாக வீடு கட்டி வசிப்பவருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் உத்தரவிட்டார்.
மேலும் வீடுகட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டி வாடகை வசூலித்தவர்கள், இவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை. நில அபகரிப்பாளர்கள் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Land seizure if the commercial premises are constructed in the allotted house
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?
உங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு!
விவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்