ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு, ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக பதிவுத்துறை அறிக்கை அளித்தது. பெரும் தொகை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளதால், இதற்கு தீர்வு காண அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்படாததால் நில உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு, பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் நிலைக்கு ஆளாகி உள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.